Categories
சினிமா தமிழ் சினிமா

தோல்வியால் ரஜினி எடுத்த திடீர் முடிவு… இதுவாது வெற்றி பெறுமா?…. எதிர்பார்ப்பில் படக்குழு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படத்தை தொடர்ந்து ரஜினி லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

அதன் பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் பாபா திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஜினியின் கதை மற்றும் திரைக்கதையில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பாபா. இந்த படத்தில் ரஜினியே தயாரித்திருந்தார். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் கடந்து 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த படம் தற்போது டிஜிட்டல் முறையில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மேலும் இப்படத்தின் புதிதாக பல காட்சிகளை இணைக்க உள்ளதாகவும், புதிய ஒரு கிளைமாக்ஸ் காட்சி இடம்பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனவே இதன் மூலம் இந்த படம் தற்போது ரசிகர்களை ஈர்க்கும் என்று படக்குழு எதிர்பார்க்கின்றனர்.

Categories

Tech |