இந்திய அணியின் கேப்டன் தோனி பல வெற்றிகளை பெறுவதற்கு முன்னாள் கேப்டன் கங்குலியை காரணம் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனான தோனி பல்வேறு கோப்பைகளை வெற்றி பெற்றுள்ளார். எனவே இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டனாக தோனி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியது ” உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் ஜாகீர்கான் மூலம் இந்திய கிரிக்கெட் அணி தொடர் வெற்றிகளை பெற்றது. எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி சிறப்பான கேப்டனாக வலம் வந்தார்.
ஆனால் அதன் பலன் அனைத்தும் கங்குலியை சார்ந்தது. டெஸ்ட் தொடர் மட்டுமல்ல அனைத்து வகையான போட்டிகளிலும் தோனிக்கு சிறந்த அணிகளே கிடைத்தது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சச்சின், சேவாக், யூசுப், நான், யுவராஜ். விராட் போன்ற அனைத்து வீரர்களுமே சிறந்தவர்களாக இருந்தோம். எனவே அணியை வழி நடத்துவதில் தோனிக்கு எந்த சிரமமும் இல்லை. டோனி பல வெற்றிகளை கங்குலியின் உழைப்பினால் பெற்றுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.