தோணி மற்றும் விராட் இவர்களின் திறமையை முதலில் கண்டறிந்தவர் இவர்தான் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஆர் கே ஷோவில் பங்கேற்று கங்குலிக்கு முன்னதாகவே தோனியின் திறமையை திலிப் வெங்சர்க்கார் தெரிவித்திருந்தார் என்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில் : தோனி ஒரு தனித்துவமான மனிதர், எதிலும் அவருக்கென்று ஒரு தனி வழி உண்டு. ஒருமுறை இந்தியா ஏ தொடருக்காக ஜிம்பாப்வே கென்யா சென்றபோது நானும் தோனியுடன் அந்த அணியில் இருந்தேன். அச்சமயம் பிசிசிஐ புதிதாக உருவாக்கிய திறன் கண்டுபிடிப்பு பிரிவின் தலைவராக திலிப் வெங்சர்க்கார் இருந்தார். டோனியின் திறமைகளை முதன் முதலில் கண்டுபிடித்தவர் திலிப் வெங்சர்க்கார் தான் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக தினேஷ் கார்த்திக் அறிமுகமானபோது தோனிக்கு வழிவிட நேரிட்டது. இந்திய அணியில் இடம் போனதை பற்றி தன்னால் அவ்வளவு எளிதாக ஜீரணிக்க முடியவில்லை என்று கூறியவர் டெஸ்ட் தொடக்க வீரராக மிடில் ஆர்டரில் இறங்கவும் தன்னை தயார் படுத்திக் கொண்டார். வாசிம் ஜாபர்ருடன் இங்கிலாந்தில் தொடக்க வீரராக இறங்கி அத்தொடரில் தொடக்க கூட்டணியில் சராசரி 50 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. தோனியை பங்கள்தேஷ் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யக்கூடியதாக கங்குலி சமீபத்தில் தெரிவித்திருந்தார். டோனி மட்டுமல்ல இன்று உலக கிரிக்கெட்டை கலக்கி வரும் விராட் கோலியின் திறமையையும் அடையாளம் கண்டு அவரை அணியில் தேர்வு செய்ய வைத்தவர் திலிப் வெங்சர்க்கார் என்பது குறிப்பிடத்தக்கது.