தெரு நாய்களின் தொந்தரவு அதிகமானதால் அதை கட்டுபடுத்தும்படி பொதுமக்கள் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
சேலம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிகப்படியான தெரு நாய்கள் இருக்கின்றன. இந்த தெருநாய்கள் அடிக்கடி பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றன. இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் இருக்கும் தெருநாய்கள் அடிக்கடி சாலையில் செல்பவர்களை விரட்டுவது மற்றும் கடிப்பது போன்ற பல்வேறு இடையூறுகள் செய்கின்றன.
இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே தெருநாய்களின் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.