Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அவதூறாக பேசிய நபர்…. போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்…. நெல்லையில் பரபரப்பு….!!

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் குடிநீர் பம்பு ஆபரேட்டராக விநாயகம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் மற்றும் டெங்கு பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் நகர பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |