Categories
உலக செய்திகள்

தூங்கும் குட்டி யானையை எழுப்பும் தாய்…. கிச்சு கிச்சு மூட்டும் பூங்கா ஊழியர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

மிருகக்காட்சிசாலையில் அயர்ந்து தூங்கும் குட்டி யானையை அதன் தாய் தட்டியெழுப்பும் அழகிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

செக் குடியரசு நாட்டில் பிராக் என்னும் மிருகக்காட்சிச்சாலை அமைந்துள்ளது. இந்த மிருகக்காட்சி சாலையில் 47 நொடிகளுக்கு எடுக்கப்பட்டுள்ள ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் குட்டி யானையானது தரையில் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்றது. இதனை கண்ட தாய் யானை தனது குட்டியை தும்பிக்கையினால் எழுப்ப முயற்சிக்கிறது. இருப்பினும், அந்த குட்டி யானை அசையாமல் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறது.

https://twitter.com/buitengebieden_/status/1438966385380663299?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1438966385380663299%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnewsview%2F116224%2FElephant-mother-fails-to-wake-her-baby-up-from-sleep–Viral-video-shows-what-happened-next

இதனால் தாய் யானை பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக அருகில் நின்று கொண்டிருக்கிறது. இதனை பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் கவனித்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் குட்டியானையை தட்டி எழுப்புகின்றனர். ஆனால் குட்டி யானை தூக்கத்தில் இருந்து எழும்பாததால் அதனை கிச்சு கிச்சு மூட்டி எழுப்ப முயற்சித்தனர். அதன் பிறகே குட்டி யானையானது தூக்கத்திலிருந்து எழுந்து தன் தாயினை நோக்கி ஓடிச் சென்றது. இந்தக் காட்சியானது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் அதே சமயத்தில் வேடிக்கையாகவும் இருந்தது.

Categories

Tech |