நெல்லையிலிருக்கும் கன்னடியன் கால்வாயில் தண்ணீர் எளிதாக செல்வதற்காக அமலைச் செடிகள் அகற்றப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் விவசாயிகள் பயன் பெறும் விதமாக கன்னடியன் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனையடுத்து கன்னடியன் கால்வாயில் தண்ணீர் எளிதாக செல்வதற்கு பொதுப்பணித் துறையின் சார்பாக பொக்லைன் எந்திரத்தின் மூலம் அமலைச் செடிகளை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான முக்கிய அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.