Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் தினத்தில் மது விற்பனை…. காவல்துறையினர் அதிரடி வேட்டை…. 104 பேர் கைது….!!

திருவள்ளுவர் தினத்தன்று மது விற்ற குற்றத்திற்காக 104 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது ஆனால் ஒரு சிலர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்தனர். இதை தடுக்கும் வகையில் மது விற்பனையை கண்காணிக்க மாவட்ட காவல் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி திருவள்ளுவர் தினத்தில் மாவட்டத்தில் மது விற்றதாக ஒரே நாளில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் மதுபாட்டில்கள் விற்பனை செய்த 104 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 785 மது பாட்டில்களும் 99 ஆயிரத்து 420 ரூபாயும் பரிந்துரை செய்யப்பட்டது.

Categories

Tech |