Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்… தாய் வீடு இதுதான்…. காவல்துறையினர் நிகழ்ச்சி….!!

தூத்துக்குடி மில்லர்புரம் ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.

தூத்துக்குடி மாவட்டம் மில்லர்புரம் பகுதியில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதப் படையை சேர்ந்த காவல்துறையினர் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். விழாவுக்கு மாவட்ட காவல் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூடுதல் காவல் சூப்பிரண்டுகள் செல்வன், கோபி ஆகியோர் முதன்மை வகித்தனர். தூத்துக்குடி ஆயுதப்படை காவல் அதிகாரி ஜாகிர் உசேன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் காவல் சூப்பிரண்டு குத்துவிளக்கேற்றி பொங்கல் பானைக்கு தீபம் ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், காவல் துறையை பொருத்தவரை ஒரு மாவட்டத்தின் தாய்வீடு ஆயுதப்படை தான்.

பொங்கல் என்பது அனைத்து சமுதாயத்தினரும் விரும்பி கொண்டாடும் ஒரு பண்டிகை. இது எந்த மதத்தையும் சார்ந்தது கிடையாது. தைப்பொங்கல் என்பது தமிழர்களின் வாழ்வோடு இணைந்த தினம் என உரையாற்றினார். அதைத்தொடர்ந்து ஆயுதப்படை போலீசாருக்கான உறியடி போட்டி நடைபெற்றது. விழாவில் அனைவருக்கும் கரும்பு, இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டன போலீசாரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. ஏராளமான ஆயுதப்படை காவல்துறையினர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். கடைசியாக ஆயுதப்படை துணை காவல் சூப்பிரண்டு கண்ணபிரான் நன்றியுரை ஆற்றினார்.

Categories

Tech |