Categories
மாநில செய்திகள்

“தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்” வெளிவரும் அதிர்ச்சி உண்மைகள்…. சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல்….!!!!

தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இன்று 2-வது நாளாக சட்டப்பேரவை தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை குழு சமர்ப்பிப்பித்தது. அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய போராட்டக்காரர்களுக்கு எந்த விதமான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட கலவரத்தில் போராட்டக்காரர்கள் ஓடிக் கொண்டிருக்கும் போதே போலீசார் துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்துள்ளனர்.

இந்த கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு உயர் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுக்க உயர் அதிகாரிகள் தவற விட்டதோடு, ஒருங்கிணைப்புடனும் செயல்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு 12 காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் எந்தவிதமான சூழ்நிலையில் துப்பாக்கி சூடு நடைபெற்றது மற்றும் துப்பாக்கி சூடுக்கு முந்தைய, பிந்தைய நிலவரங்கள் குறித்த அனைத்து விதமான காரணங்களையும் ஆராய்ந்து அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |