கடந்த 2018ஆம் ஆண்டும் மே மாதம் 22ஆம் தேதி, தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டின் விளைவாக இறப்பு,காயங்களுக்கான காரணங்கள் மற்றும் அந்த சூழ்நிலை, அந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு ஏற்பட்டதற்கான காரணங்கள், பொது சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்கள் சேதம் அடைந்து ஆகியவற்றை குறித்தும், அதற்கு பின்னர் நடந்த நிகழ்வுகள் குறித்தும் ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையமானது, அமைக்கப்பட்டு விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அந்த விசாரணை ஆணையத்தின் உடைய அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த விசாரணை பொறுத்தவரைக்கும், எந்த மாதிரியான விசாரணை நடைபெற்றது ? அந்த நிகழ்வு நடந்தது முதல் கொண்டு அந்த பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் கூட அந்த விசாரணை அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த புகைப்படங்களோடு கூடிய விளக்கங்களும் கூட விசாரணை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியர் வளாகத்திற்குள் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் கூட மிக விரிவாகவே தெரிவிக்க ப்பட்டுள்ளது.ஒவ்வொரு பாயிண்டாக விசாரணை அறிக்கை ஆனது அளிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடந்தது முதல் இந்த அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விசாரணை அறிக்கையானது நான்கு கட்டங்களாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இறுதி அறிக்கையான நான்காவது அறிக்கையில் என்னென்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அப்போது அதிகாரிகளாக இருந்தவர்கள்,
என்னென்ன மாதிரியான தகவல்கள் அவர்கள் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினுடைய நிலை குறித்து அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நான்கு பகுதிகளை கொண்ட அறிக்கை சட்டப்பேரவையில், இன்று தாக்கல் செய்யப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.