Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொட்டித் தீர்க்கும் மழை… வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீர்… நோய் பரவும் அபாயம்..!!!

தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுமார் 5 ஆயிரம் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்கிறது. நேற்று அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 59 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக தூத்துக்குடியில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. இந்நிலையில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழை இன்று அதிகாலை 5 மணி வரை நீடித்தது.

இதனால் தூத்துக்குடி நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை காரணமாக சுமார் 5 ஆயிரம் வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழை சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாக்கடை நீருடன் மழை நீர் கலப்பதால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |