Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் பேஷ் பேஷ்… துறைமுகத்தில் புதிய சாதனை.. அதிகாரி வெளியிட்ட தகவல்…!!!

தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி துறைமுகத்தில் ஒரே நாளில் அதிக சரக்கு பெட்டகங்களை கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வ. உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:- தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி துறைமுகத்திற்கு 260.05 மீட்டர் நீளம் கொண்ட பிரம்மபுத்ரா என்ற சரக்கு கப்பல் கடந்த 8ஆம் தேதி வந்தடைந்தது. இந்த கப்பல் தூத்துக்குடி – காண்ட்லா – பிபாவவ் – கொச்சி – தூத்துக்குடி ஆகிய துறைகளுக்கு இடையே சுழற்சி முறையில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சரக்குப்பெட்டக கப்பலிலிருந்து ஒரே நாளில் 4 ஆயிரத்து 413 சரக்கு பெட்டகங்கள் கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 3 ஆயிரத்து 979 சரக்கு பெட்டகங்கள் ஒரே நாளில் கையாளப் பட்டிருந்தது பெரும் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு 25 சரக்கு பெட்டகங்கள் வீதம் இது நடைபெற்றுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |