நெல்லையில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. நேற்றைய தினம் வரை 10,108 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. நேற்று ஒரே நாளில் 436 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் ஏற்கனவே 136 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 186ஆக உயர்ந்துள்ளது.
இன்று பாதிக்கப்பட்டவர்களில் நெல்லை மாவட்டத்தில் 39 பேரும், நெல்லை மாநகர பகுதியில் ஒருவரும் என 40 பேருக்கும், தூத்துக்குடியைச் சேர்ந்த 1 நபருக்கும், விருதுநகரைச் சேர்ந்த ஒருவருக்கும், தென்காசியை சேர்ந்த 8 பேரம் என மொத்தமாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிமாகும் என்று அஞ்சப்படுகின்றது.