Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அழகை கெடுக்கும் தொப்பை….குறைப்பதற்கு இதோ எளிய தீர்வு…!!

இக்காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது தொப்பை குறைக்காண வழிகளை பார்ப்போம்…

1. தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்துவிட்டு அதில் சிறிது உப்பு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் நிச்சயம் தொப்பை குறையும். இரண்டு வாரத்தில் நல்ல மாற்றம் தெரிவதை உணரலாம்.

2. லவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள கெட்ட கொழுப்பு கரைந்து தொப்பை குறையும்.

3. உணவில் சேர்க்கும் உப்பின் அளவை குறைக்க வேண்டும், ஏனெனில் அதிகப்படியான உப்பு உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிப்பதோடு தொப்பையை குறைக்க தடையாக இருக்கும். எனவே உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ளவேண்டும். இதனாலும் தொப்பை குறையும்.

4. நாம் சாப்பிடுகின்ற உணவை எப்போதும் மெதுவாக ரசித்து, ருசித்து மென்று சாப்பிடுவதால் அதிகமான அளவில் உணவு  இருக்கலாம். மேலும் இதனை எப்போதும் பின்பற்றினால் தொப்பை வராமல் இருக்கும்.

5. தினமும் சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக வெண்ணீரில் சோம்பு சேர்த்து குடித்து வந்தால் தொப்பை விரைவில் குறைந்து நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

6. பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால் அதில் உள்ள வைட்டமின் “சி” உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் தொப்பை குறைந்து அழகான உடலை பெற முடியும்.

7. தினமும் குறைந்தது 7, 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி குடித்து வந்தால் உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

8. அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால் உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

9. நாம் சாப்பிடும் உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால் அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். இதில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் இன்சுலின் சுரப்பை சீராக வைத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையது.

10. முக்கியமாக எதற்கெடுத்தாலும் வண்டியில் செல்வதை தவிர்த்துவிட்டு நடந்து சென்றால் தொப்பை குறைவதோடு கால்களும் வலுவாகும். அதேபோல் தினமும் ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டினால்,இரண்டு வாரத்திற்கு பிறகு  நல்ல மாற்றம் தெரியும்.

11. தினமும் மூணு நாள் கப் க்ரீன் டீ குடித்து வந்தால் தொப்பை குறையும். சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து பசி ஏற்பட்டால் வெள்ளரிக்காய், தக்காளி, ப்ராக்கோலி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது சிறந்தது.

12. பழங்கள் என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

Categories

Tech |