Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வெவ்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள்… சூப்பிரண்டு அதிகாரி பரிந்துரை… குண்டர் சட்டத்தில் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை ஆட்சியரின் உத்தரவின்படி குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை அடுத்துள்ள சூடியூர் கிராமத்தில் வசித்து வரும் கற்பூர சுந்தரபாண்டியன்(35) என்பவர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை அருகே உள்ள சாலையில் சூடியூரை சேர்ந்த வெங்கடேஸ்வரன்(27), சதீஷ்குமார்(20), அருண்(20) ஆகியோர் மது அருந்திவிட்டு வாகனத்தை குறுக்கே நிறுத்தி வைத்திருள்ளனர். இதனையடுத்து கற்பூர சுந்தரபாண்டியன் அவர்களை கண்டித்து வாகனத்தை எடுக்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பெரும் கற்பூர சுந்தரபாண்டியனின் வீட்டிற்குள் நுழைத்து அரிவாளால் அவரை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் பார்த்திபனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கமுதி நீராவி பகுதியில் வசித்துவரும் குருசாமி என்பவர் அருப்புகோட்டை பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அம்மன்பட்டியை சேர்ந்த அஜித் விக்னேஸ்வரன்(24) மற்றும் மணிவண்ணன் ஆகிய இருவரும் குருசாமியை வழிமறித்து கத்தி போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் 7,500 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

தற்போது இந்த 2 வழக்குகளிலும் தொடர்புடைய மணிவண்ணன் மற்றும் வெங்கடேஸ்வரன் ஆகிய இருவரும் அதிக குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் மாவட்ட ஆட்சியர் சசிகலாவிற்கு பரிந்துரை செய்துள்ளார். அதனை ஏற்ற ஆட்சியர் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்ட நிலையில் மணிவண்ணன் மற்றும் வெங்கடேஷ்வரனை மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |