Categories
அரசியல் மாநில செய்திகள்

“அந்த‌ 6 விஷயங்கள்”…. தேர்தலுக்கு ரெடியான எடப்பாடி தரப்பு…. தயார் நிலையில் சேலம் அதிமுக…!!!!!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி வருகிற 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமையும் என்று கூறினார். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது, தமிழகத்தில் வருகிற 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக கட்சி சிறப்பான வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தற்போது இருந்து திறம்பட பணிகளை செய்ய வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அதிமுக கட்சியின் மீது உண்மையான பற்று இருக்கும் தொண்டர்களை சேர்ப்பதில் நிர்வாகிகள் தீவிரம் காட்ட வேண்டும்.

சும்மா தொண்டர்களை சேர்த்தோம் என்று சேர்த்து விட்டு கணக்கு காட்டி விடாமல் கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களை சேர்க்க வேண்டும். அதிமுக கட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். கட்சியில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் ஒருமித்த கருத்தோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்று கூறினார். இதிலிருந்தே தற்போது இருந்தே எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தேர்தலுக்கு தயாராகி விட்டது என்பது தெளிவாக தெரிய வருகிறது.

இந்நிலையில் ஆளும் கட்சியான திமுகவுடன் மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் காங்கிரஸ் போன்றவைகள் கூட்டணியில் இருக்கிறது. இதனையடுத்து தற்போது பிளவுபட்டு கிடைக்கும் அதிமுக கட்சியோடு பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் கூட்டணி அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுக வலுவான கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், அதே போன்று அதிமுக கட்சியும் வலுவான கூட்டணி அமைத்தால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

Categories

Tech |