Categories
மாநில செய்திகள்

உயிருக்கு பயந்தவர்கள்…. அரசியலுக்கு வரக்கூடாது – கஸ்தூரி டுவிட்…!!

உயிருக்கு பயந்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நடிகை கஸ்தூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் தொடங்குவதாக இருந்த நிலையில் இரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய பிறகு, தான் கட்சி தொடங்கப் போவது இல்லை என்று நேற்று அறிவிப்பு வெளியிட்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலரும் ரஜினியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது எதிர்பார்த்ததுதான் எத்தனையோ முறை நான் உட்பட பலரும் அவரிடம் சொன்னது தான்.

அப்போதே சொல்லியிருந்தால் பலருடைய வலியை தவிர்த்திருக்கலாம். ஆண்டுகளையும் மிச்சப்படுத்தி இருக்கலாம். இப்பவாச்சும் சொன்னாரே இப்ப இல்லனா எப்பவுமே இல்லை. கோடி பணத்தின் நஷ்டத்தை விட கோடி மக்களின் மன கஷ்டம் பெரியது. தன் உயிருக்கும், தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக் கூடாது. ரஜினி அவர்களின் முடிவுக்கு என்னுடைய பாராட்டுக்கள். நீங்கள் பூரண நலத்துடன் நிம்மதியாக நீண்ட காலம் வாழ வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |