Categories
தேசிய செய்திகள்

முஸ்லீம்களுக்கு அனுமதியில்லை ? சர்சையில் சிக்கிய மருத்துவமனை ….!!

முஸ்லிம்கள் மருத்துவமனைக்குள் கொரோனா பரிசோதனை செய்யாமல் வரக்கூடாது எனக் கூறிய மருத்துவமனை உரிமையாளர் மீது வழக்கு பதிவாகியுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் மிராட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊடகமொன்றிற்கு வித்தியாசமான விளம்பரம் ஒன்றை கொடுத்ததன் மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த விளம்பரத்தில் முஸ்லிம் நோயாளிகளும் அவர்களுடன் வரும் உதவியாளர்களும் கொரோனா பாதிப்பிற்கான சரியான பரிசோதனையை நடத்தினால் மட்டுமே மருத்துவமனையின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என உள்ளூர் ஊடகம் ஒன்றில் அந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

விளம்பரம் வெளியானதை தொடர்ந்து மருத்துவமனையின் உரிமையாளர் மத உணர்வுகளை தூண்டும் நோக்கத்தில் வேண்டுமென்றே இவ்வாறு செயல்பட்டதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றான உத்தரப்பிரதேசத்தில் 20 சதவீதம் முஸ்லிம் மக்களே உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக மாநிலம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. சுமார் 970 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 114 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |