Categories
தேசிய செய்திகள்

‘வந்தே மாதரத்தை ஏற்காதவர்களுக்கு நாட்டில் வாழ உரிமையில்லை’

வந்தே மாதரத்தை ஏற்காதவர்களுக்கு நாட்டில் வாழ உரிமையில்லை என மத்திய இணையமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை மக்களுக்கு விளக்கும் வகையில் ஜன் ஜக்ரன் சபா தொடங்கப்பட்டது. பொதுமக்கள் திரளாகப் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்று சட்டங்கள் குறித்து விளக்குவர். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், “நாட்டுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் தேசத்தின் மீது பற்றுவைக்காதவர்கள் ஆவர். நாட்டின் சுதந்திரம், ஒற்றுமை, வந்தே மாதரம் ஆகியவற்றை ஏற்காதவர்களுக்கு நாட்டில் வாழ உரிமையில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம்  அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டும். நாட்டுப் பிரிவினையால் ஏற்பட்ட தவறை குடியுரிமை திருத்தச் சட்டம் திருத்தும். 70 ஆண்டுகளுக்கு முன்பே குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்திருக்க வேண்டும். காங்கிரஸ் செய்த தவறை நாங்கள் திருத்துகிறோம். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸ் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தது” என்றார்.

Categories

Tech |