பிரான்சில் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்கு பிறகு வாழிட உரிமை அட்டை இல்லாதவர்கள் சட்டப்படி நாட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் வசிக்கும் பிரித்தானியர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியதில் இருந்து பல மாற்றங்களை சந்தித்து வருகின்றனர். அதாவது பிரான்சில் 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 31-க்கு முன்பிலிருந்து அங்கு வசித்து வரும் பிரித்தானியர்கள் Carte de sejour எனப்படும் வாழிட உரிமை அட்டையை 2021 அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் பெற்றிருக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டது. மேலும் பிரான்சுக்கு 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 31-க்கு பிறகு வந்திருந்தால் இந்த விதி பொருந்தாது.
அதேசமயம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியிருந்ததால் 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதிக்கு Carte de sejour வாழிட உரிமை அட்டை பெறுவதற்கான காலகெடு தள்ளிவைக்கப்பட்டது. அதேபோல் 2021 செப்டம்பர் 30-ஆம் தேதி வரை Carte de sejour வாழிட உரிமை அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியும் நீட்டிக்கப்பட்டது. அதாவது Carte de sejour வாழ்விட உரிமை அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் மக்கள் 2021 செப்டம்பர் 30-க்கு பிறகு விண்ணப்பித்திருந்தால் அவர்களுடைய விண்ணப்பமானது நிராகரிக்கப்படும் என்று கூறப்பட்டது.
மேலும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்கு பிறகு வாழிட உரிமத்திற்கான ஆதாரத்தை சட்டபூர்வமாக சமர்ப்பிக்க விட்டால் அதிகாரபூர்வ விஷயங்கள் சிலவற்றை செய்ய முடியாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வாழிட உரிமை அட்டை :-
1. பிரான்ஸில் வேலை செய்வதற்கான உரிமை உங்களுக்கு உள்ளதா என்பதனை சோதிப்பதற்கு வேலை வாங்குவார் வாழிட உரிமை அட்டையை கேட்கலாம்.
2. இனி வீடு வாடகைக்கு விடுபவர்களும் உங்களிடம் வாழிட உரிமை அட்டை கேட்க வாய்ப்புள்ளது.
3. நீங்கள் அலுவலகத்தில் நிதி உதவி பெறும் பட்சத்தில் கட்டாயம் வாழிட உரிமை தேவைப்படும்.
4. மருத்துவ உதவி பெறுவதற்கான உரிமை உங்களுக்கு உள்ளதா என்பதனை சோதிப்பதற்காக அலுவலகத்தில் வாழிட உரிமை அட்டை கேட்கப்படும்.
5. முக்கியமாக பிரான்ஸ் காவல்துறையினர் வாகன சோதனையின் போதும் வழியில் நிறுத்தியும் வாழிட உரிமையோ அடையாள அட்டையையோ கேட்கலாம்.
அதேபோல் நீங்கள் வாழிட உரிமை அட்டையினை காட்டாமல் போனால் வேலை, அவசர மருத்துவ உதவி, வாடகைவீடு, உதவிகள் அனைத்தும் மறுக்கப்படும். அதோடு மட்டுமில்லாமல் சட்டப்படி நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டு கொள்ளப்படலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.