கோவாக்சின் தடுப்பூசி ஓமனில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓமன் அரசு தனிமைப்படுத்துதல் இன்றி கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது இந்தியாவிலிருந்து ஓமன் செல்லும் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
மேலும் கோவாக்ஸின் ஓமனில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஓமன் பயணிப்பதற்கு முன்பு கோவாக்சின் தடுப்பூசியை 14 நாட்களுக்கு முன் செலுத்தி கொண்டவர்கள் அந்நாட்டில் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.