செந்தியாளர்களை சந்தித்த சசிகலா, பண்ருட்டி ராமசந்திரன்னுடன் நடத்திய சந்திப்பு என்பது அவர் என்னுடைய மூத்த அண்ணன். அதனால் பார்த்துட்டு போலாம் என்று வந்தேன், மத்தபடி அரசியல் விஷயமாக கலந்து பேசி கொண்டோம். என்னை பொருத்தவரை அண்ணா திமுகவில் உள்ள அத்தனை பேரும் எனக்கு வேண்டியவர்கள் தான், அதனால் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
தலைவர் இந்த கட்சியை ஆரம்பிக்கும் பொழுது ஜாதியும் பார்த்ததில்லை, மதமும் பார்த்ததில்லை. அந்த அடிப்படை கொள்கை இந்த நிமிடம் வரை எங்கள் மனதில் உள்ளது. அதனால் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது எல்லாரையும் ஒன்றாக நினைக்கின்ற இயக்கம், அது மதமாக இருந்தாலும் சரி, ஜாதியாக இருந்தாலும் சரி அதன் அடிப்படையில் தான் என்னுடைய ஒவ்வொரு நகர்வுகளும் இருக்கும், எல்லோரையும் ஒன்றிணைத்து செல்லக்கூடியது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பண்பாடு.
எங்க தலைவர் அந்த வழியைத் தான் காமித்துள்ளார், அந்த வழியில் தான் நான் எடுத்து செல்வேன். கட்சி என்று சொல்லும் போது அது ஒரு நிறுவனம் அல்ல, இது எல்லோருக்குமான ஒரு இயக்கம் தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரைக்கும்…. அதில் உள்ள அத்தனை பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் 50 ஆண்டு காலமாக இந்த கட்சி வந்திருக்கிறது, அதை நிலை நிறுத்துவது தான் என்னுடைய கடமையும் கூட, இங்கு இரண்டு தலைவர்களுக்கும் நான் அதைத்தான் செய்ய வேண்டும். அதை நான் நிச்சயமாக செய்வேன். இதெல்லாம் கால போக்கில் சரியாக விடும் என்பது திடமான நம்பிக்கை.