சொந்த தாத்தாவே தனது பேத்திக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தைச் சேர்ந்த 36 வயதுப் பெண்ணுக்கு, கோவையை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர். இதனால் அந்த பெண் தனது மாமனார் மாமியார் பராமரிப்பில் தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் சொந்த தாத்தாவான சுப்ரமணியன்(72) தனது 10 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிய வந்துள்ளது.
இதை கேட்டு அதிர்ந்து போன அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுப்பிரமணியனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அடைக்கலமாக வாழ்ந்து வந்த வீட்டில் சொந்த தாத்தாவே தனது பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.