Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள்…. மனு அளிக்கலாம் – துரைமுருகன் அறிவிப்பு..!!

திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் பிப்-17 முதல் 24ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதி விண்ணப்ப கட்டணமாக ரூ.25,000 செலுத்த வேண்டும்.  மகளிர் மற்றும் தனித்தொகுதிக்கு ரூ.15,000 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

Categories

Tech |