பொள்ளாச்சி அருகிலுள்ள ஆழியார் புளியங்கன்டில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்களது குடியிருப்புகளை புதுப்பித்த தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை அருவன பகுதியில் வசித்து வந்த மலைவாழ் மக்கள் வெளியேற்றப்பட்டு, நவமலை, ஆழியார், வாய்க்கால் மேடு, புளியங்கன்டி பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். மூன்று தலைமுறைகளாக அப்பகுதியில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளில் வசித்து வரும் இவர்கள், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை தொடங்கி உள்ளதால் இவர்கள் வசிக்கும் வீடுகள் முற்றிலும் பழுதாகி சீரமைக்க முடியாமல் உள்ளது. இதை அடுத்து மக்களை வருவாய்த்துறையினர் அரசு தொடக்கப்பள்ளியில் தங்க வைத்தனர். எனவே தங்களது வீடுகளை பாதுகாப்பான முறையில் புதுப்பித்து தருமாறு அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.