தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை எனக் கூறப்படும் பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.மேலும் பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் ஈரோடு,கரூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.60 அடியாக உள்ளது. மேலும் மொத்த அணையின் நீர்மட்டம் 102 அடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. மேலும் பவானிசாகர் அணையிலிருந்து விரைவில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.