கரும்புத் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொன்னாபுரம் வெட்டுக்காடு தோட்டத்தில் சிவசெல்வகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இவர் தனது வயலில் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இதனையடுத்து சாகுபடி செய்யப்பட்டு 90 நாட்கள் மட்டுமே ஆன இவரது கரும்பு தோட்டத்தின் ஒரு பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவசெலவகுமார் மற்றும் அருகில் இருந்தவர்கள் தீயை அணைப்பதற்கு முயற்சித்தனர்.
மேலும் இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன் தலைமையில் தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தினால் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கரும்பு பயிர்களும், 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொட்டுநீர் பாசன குழாய்களும் எரிந்து நாசமானது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.