Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற மாணவி…. திடீரென இப்படி ஆயிட்டு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மாணவியின் மீது மின்கம்பி அறுந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனத்த மழை பெய்தது. இவ்வாறு நாள் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வாணியன்விளையில் சுனில் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெட்டுமணியில் பத்திரம் எழுதிக் கொடுக்கும் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு மனைவியும், அஷிகா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் அஷிகா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அஷிகா தன்னுடைய பெரியம்மாவுடன் குழித்துறை ஆற்றங்கரை அருகிலுள்ள தோட்டத்திற்கு பழைய பாலம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வீசிய காற்றில் திடீரென மின்கம்பி ஒன்று அறுந்து அஷிகா மேல் விழுந்தது. இதனால் அஷிகா மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஷிகாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |