தோட்டத்திற்குள் மலைப்பாம்பு ஒன்று நுழைந்ததால் தொழிலாளர்கள் அடித்து பிடித்து ஓடினர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டபுரம் கிராமத்தில் விவசாயி அமிர்தலிங்கம் வசித்து வருகின்றார். இவர் 4 ஏக்கர் நிலப் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இந்நிலையில் கரும்பு வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலைப்பாம்பு ஒன்று கரும்பு தோட்டத்திற்குள் படுத்து கிடந்ததை பார்த்து தொழிலாளர்கள் அடித்துப் பிடித்து ஓடினர்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மலைப்பாம்பை பிடித்தனர். இதனையடுத்து பிடிப்பட்ட அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் ஒரு சாக்குப்பையில் போட்டு காட்டு பகுதியில் கொண்டு விட்டனர். இவ்வாறு பிடிபட்ட மலைப்பாம்பு 12 அடி நீளம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.