Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தகவல் வந்துச்சு…. 8 அடி நீளம் இருக்கும்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

தோட்டத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊத்து ஓடை வனப்பகுதியை ஒட்டி மாரிமிக்கேல் என்பவருக்கு சொந்தமான மரவள்ளி தோட்டம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இவர் தனது தோட்டத்தை பார்வையிட சென்ற போது அங்கு 8 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் இதுபற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு மாரிமிக்கேல் தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனக்காப்பாளர் மணிகண்டன் மலைப்பாம்பை பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் பாம்பை பிடிக்க முடியாத காரணத்தினால் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து மலைப்பாம்பு உயிரோடு பிடித்து தகறை காப்புக்காடு பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

Categories

Tech |