Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பணி சுமை காரணமாக…. தோட்டக்கலை அலுவலர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தோட்டக்கலை அலுவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டி.ஆர்.நகர் பகுதியில் லோகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெள்ளகோவில் தோட்டக்கலை அலுவலகத்தில் உதவி தோட்டக்கலை அலுவலராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் நடைபெற்று 7 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் லோகேஷ் செம்மாண்டம்பாளையம் பகுதியில் வாயில் நுரை தள்ளிய நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தோட்டக்கலை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அலுவலகத்தில் உள்ளவர்கள் லோகேஷை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு லோகேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து லோகேஷின் மனைவி சுகந்தி வெள்ளகோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவர் கடந்த 2 நாட்களாக பணி சுமையில் இருந்ததால் இறந்திருக்கலாம் என கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் லோகேஷ் பணிசுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |