Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடி…. பீதியில் மக்கள்…. வனத்துறையினரின் தீவிர முயற்சி….!!

வாழைப்பழத் தோட்டத்தில் பதுங்கியிருந்த கரடியை வனத்துறையினர் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பார்ப்பரம்மாள்புரம் பகுதியில் உள்ளே வாழை தோட்டத்தில் கரடி ஒன்று பதுங்கியது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருநெல்வேலி மாவட்ட வனத்துறையினர் கௌதம், வனச்சரக அலுவலர் கருப்பையா, வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக மருத்துவ கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். இதற்காக பெரிய கூண்டு வரவழைக்கப்பட்டு அதில் கரடிக்கு பிடித்த பலாப்பழம், பனம் பழம், மாம்பழம் உள்ளிட்டவற்றை அதில் போட்டனர்.

ஆனால் கரடி கூண்டுக்குள் சிக்காமல் வேறொரு இடத்திற்கு தப்பிச் சென்றுள்ளது. இந்நிலையில் மறுநாள் காலையில் கரடி சிக்கியிருக்கும் என நினைத்து வனத்துறையினர் வந்து பார்த்தனர். ஆனால் கூண்டிற்குள் கரடி சிக்காததால் வனத்துறையினர் பல்வேறு இடங்களுக்கு சென்று அதை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, நேற்று காலையிலிருந்து இரவு வரை வாழைப்பழத் தோட்டத்தில் கரடி பதுங்கியிருந்தது. அதை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கரடி கூண்டிற்குள் சிக்காமல் தப்பிச் சென்றுள்ளது. எனவே இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அசம்பாவிதம் நடக்கும் முன்பாக அந்த கரடியை பிடிக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |