Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொற்று இல்லாததால் மூடப்பட்ட கொரோனா வார்டு…!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாததால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் கோவிட் சிறப்பு வார்டு மூடப்பட்டது.

உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கொரோனா  தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. ஏராளமானோர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தொற்று குறைந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாட்களாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

இதன் காரணமாக பழனி அரசு மருத்துவமனையிலிருந்து கொரோனா சிறப்பு வார்டு மூடப்பட்டது. பழனியை அடுத்த நரிக்கல்பட்டி கிராமத்தில் அதிக தொற்று இருந்த நிலையில் தற்போது பாதிப்பு அறவே நீங்கி உள்ளது. இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |