Categories
லைப் ஸ்டைல்

“சிந்தனையை தெளிவாக்கி… ஞாபக சக்தியை அதிகரிக்கும்”…. அறிவு முத்திரை… தினமும் செய்யுங்க…!!

ஞாபக சக்தியை அதிகமாக இந்த முத்திரையை நீங்கள் உபயோகிக்கலாம்.

செய்முறை :

ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம்.

ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். எந்தவொரு அமைதியான இடத்திலும் இந்த முத்திரையை செய்யலாம்.

நேர அளவு:

இந்த முத்திரைக்கு குறிப்பிடும்படியாக நேர அவகாசம் தேவையில்லை, எந்த நேரத்திலும் இதனைச் செய்யலாம்.

பலன்கள்:

அறிவு முத்திரையல்லவா, அறிவைக் கூட்டும். கட்டை விரலின் நுனியானது அகஞ்சுரப்பிகளின் (முக்கியமாக கபச்சுரப்பி pituitary ) மையமாக விளங்குகிறது. விரல்கள் அமுக்கப்படுவதால் இந்தச் சுரப்பிகள் நன்கு வேலை புரிகின்றன.

அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.

• ஞாபக சக்தியைக் கூட்டும், மூளையைக் கூர்மையாக்கும்.

• கிரகிக்கும் செயற்பாட்டைக் கூட்டும், மேலும் தூக்கமின்மையை நீக்கும்.

• ஒழுங்கான பயிற்சியின் மூலம் மன உள நோய்களான ஹிஸ்டீரியா, மன எரிச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும். மனம் சாந்தமடையும்.

Categories

Tech |