Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து

செய்யும் தொழிலே தெய்வம் …

ஒரு  கிராமத்தில் ஒரு பழைய ஆலயம் இருந்தது அதன் கூரை ஒழுகிக்கொண்டிருந்தது சுவர்கள் கீழே விழுந்த மாதிரி இருந்தது பாதிரியார் சபை மக்களை பார்த்து ஆலயத்தை சரிபார்க்க பணத்தை தயார் பண்ண சொன்னார் ஆண்டவர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை   ஆலயத்திற்கு கொண்டு வாருங்கள் என்று சொன்னார் பணமிருந்தால் பணத்தைக் கொண்டு வாருங்கள் தக்காளி பழம் இருந்தால் அதை கொண்டு வாருங்கள் அதை ஆலயத்தில் வைத்து ஏலம் விடலாம் அதை ஆலய கட்டுமான பணிக்கு பயன்படுத்தலாம் உங்களிடம் செங்கல் மணல் இருந்தால் அதையும் கொண்டு வாருங்கள் அதை ஆலயம் கட்ட பயன்படுத்தலாம் என்று பாதிரியார் சொன்னார்.

ஏலம் இடுகிற நாளில் தாங்கள் பயன்படுத்திய உதவியான அனைத்து பொருட்களையும் எல்லோரும் எடுத்துக் கொண்டு வந்தார்கள் அங்கு ஒரு வினோதமான பொருள் இருந்தது ஆலயத்தின் வாசலில் ஒரு சவப்பெட்டி இருந்தது , இது ஏன் இங்கு உள்ளது என எல்லோர்க்குள் ஒரு கேள்வி  தோன்றியது  சவப்பெட்டியை கொண்டு வந்தவர் அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தார் எல்லோரும் அவரை ஒரு மாதிரியாக பார்த்தார்கள் ஆனால் அவர் எதையும் கண்டுக்காமல் உட்கார்ந்து இருந்தார்

ஆராதனை முடிந்ததும் எல்லா பொருட்களையும் ஏலம் விட ஆரம்பித்தார்கள் எல்லா பொருட்களும் ஏலம் விட்ட பின்  சவப்பெட்டி மட்டும்  அங்கே இருந்தது அந்த சவப்பெட்டியை உருவாக்கியவர்  வந்து சத்தமா எல்லோரும் முன்னாள் நானே இதை ஏலம் விடுகிறேன் நம்ம பாதிரியாருக்கு  நான் வாங்கிக் கொடுக்கிறேன் இதோட விலை 15 ஆயிரம் என சொன்னார் பாதிரியாருக்கு உடம்பு வெலவெலத்துப் போய்விட்டது உதடு வரண்டு போயிட்டு நான் இதை 20 ஆயிரத்திற்கு வாங்கி பெண்கள் ஐக்கிய சங்க தலைவிக்கு பரிசாக கொடுக்கிறேன் என்று சொன்னார் இதைக் கேட்டு வந்த அம்மா அதிர்ச்சி அடைந்து விட்டார் அவர் எழுந்து வேண்டாம் வேண்டாம் இது எனக்கு வேண்டாம் நம்ம கோவில் உபதேசி யாருக்கு 30,000 கொடுத்து வாங்கிக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தாள் உபதேசியார் அந்த அம்மாவை முறுமுறுத்து பார்த்தார் அங்கு உள்ள  யாருக்குமே அதை பரிசாக வாங்க விருப்பம் இல்லை தொடர்ந்து வரிசையாக ஏலம் எடுத்துக்கொண்டு போனார்கள் கடைசியா ஒரு பணக்கார எழுந்து ஒரு லட்சத்திற்கும் ஏலம் எடுத்து அந்த சவப்பெட்டியை செய்தவர்க்கே பரிசாக கொடுத்தார் சவப்பெட்டி செய்தவர் புன்னகையோடு சவப்பெட்டியை தன் கடைக்கு எடுத்துச் சென்றார்

அடுத்தவங்கள சாவுல பணம் சம்பாதிக்கிறார் என்று எப்பொழுதும் ஏளனமாய் பார்க்கப்படும் அந்த சவப்பெட்டி காரர் அன்று சந்தோஷத்தோடு சென்றார் அதிகமான தொகையை ஆலயத்திற்கு கொடுத்தார் அவர் தன்னுடைய கையில் இருந்து ஒரு பைசா கூட கொடுக்கவில்லை நாமும் கூட கடவுளுக்கு பல வழியில் பணி செய்து கொண்டிருக்கிறோம் இது போய் நீ செய்து கொண்டு இருக்கிறாய் என கீழ்த்தரமாக நினைக்கலாம் மற்றவர்கள் இதை நினைத்து கவலைப் படாதீங்க நீங்கள் மனமார செய்கிற பணியை கடவுள் அங்கீகரிக்கிறார் உங்கள் அவமானத்தை அவர் மகிமையாய் மாற்றுவார்.

Categories

Tech |