Categories
பல்சுவை

மகாவீரர் சிந்தனை வரிகள்…!!

சமண சமயத்தை உலகறிய செய்த மாவீரரின் சிந்தனை வரிகள்

  • அடக்கம் உடையவன் மகிழ்ச்சி அடைகிறான் அடக்கம் இல்லாதவன் துன்பம் அடைகிறான்.
  • சினம் அன்பை அழிக்கும், கர்வம் அடக்கத்தை அழிக்கும், பொறாமை அனைத்தையுமே அழிக்கும்.
  • உண்மையே உள்ளத் தூய்மையை உண்டாக்கும்.
  • கோபம் கொண்ட மனிதன் உண்மை, தூய்மை, அடக்கம் ஆகியவற்றை இழந்துவிடுகிறான்.
  • அகந்தையை வென்றுவிட்டால் அடக்கம் தானாக நம்மை வந்து சேரும்.
  • பயந்தவன் பிறரையும் பயப்பட செய்கிறான்.
  • வாழ்க்கை ஒரு போர்க்களம் நம்பிக்கைதான் ஆயுதம்.
  • பிறப்பினால் உண்டாக்கப்பட்ட  உயர்வு தாழ்வை கல்வியால் மட்டுமே உடைத்தெறிய முடியும்.
  • உண்மையின் பாதையில் நடக்கும் மனிதனுக்கு எந்த உபதேசமும் தேவையில்லை.
  • வாய்மை சந்திரனை விட தூய்மையானது சூரியனை விட பிரகாசமானது.
  • உலகில் கோழையாக மட்டும் இருக்கக்கூடாது.
  • புற்களின் மீது விழும் பனித்துளி எவ்வாறு நிலையில்லாதது அதுபோல மனித வாழ்க்கையும் ஆகும்.
  • ஏமாற்றுதல் என்பது மிக சிறிய முள் அதைப் பிடுங்கி எறிவது கடினம்.
  • அடக்கமாக வாழ்பவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுவான்.
  • சொல்லக்கூடாத பேச்சானால் அதை சொல்லாமல் இருப்பதே மேல்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |