பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு கமல் ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது.
இவர் நேற்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், இந்தியன் 2 படக்குழு படத்தின் போஸ்டரை வெளியிட்டு இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது.
ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இவரின் கலைப்பயணத்தை பாராட்டி சமூக வலைதளத்தில் வாழ்த்தியிருந்தனர். இந்நிலையில், இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் “பரந்த வெளியில் ஆரத்தழுவ அவாவும் ஆதுரக்கை விரித்திருந்தேன். ஆயிரம் லட்சமென ஆகாயத் துளிகள் வாழ்த்தாய்ப் பெய்தன. திரைக் கலைஞர், நண்பர் என ஒவ்வொரு துளிக்கும் தனித்தனியே நன்றி சொல்ல நாப்பரப்பும் நாட்பரப்பும் போதா. மனமே தருகிறேன். ஏந்திக்கொள்க” என பதிவிட்டுள்ளார்.