இலங்கைப் பெண் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்தது தொடர்பான வழக்கில் பெண் ஊழியர் உட்பட 4 சிறைக் காவலர்களையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
நாடு கடத்தப்படவிருந்த இலங்கை பெண் ஒருவர் வாகோப் என்னும் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறை ஊழியர்கள் இலங்கைப் பெண்ணை 18 நிமிடம் கழித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு மருத்துவர்கள் இலங்கை பெண்ணிற்கு அளித்த சிகிச்சை பலனின்றி 2 ஆவது நாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்நிலையில் இதனை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார். அதாவது இலங்கைப் பெண் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சிக்கிய பெண் ஊழியர் உட்பட 4 சிறை காவலர்களையும் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்த சம்பவம் சிறை துறை மற்றும் நீதித்துறையின் மிகப்பெரிய தோல்வி என்று தெரிவித்துள்ளார்.