ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் இன்னும் மாறவில்லை என்று அவர்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செய்தி தொடர்பாளர் ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் Tolo news என்னும் செய்தி தொலைக்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் செய்தி வாசிப்பாளராக காதீஜா அமீன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் Tolo நியூஸ் செய்தி சேனலில் பணிபுரிந்து வந்த காதீஜா அமீனை தலிபான் பயங்கரவாதிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி அந்த பணிக்கு தலிபான் பயங்கரவாதிகளை சேர்ந்த ஆண் நபர் ஒருவரை நியமித்துள்ளார்கள்.
இது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செய்தி வாசிப்பாளர் கூறியதாவது, தலிபான் பயங்கரவாதிகள் இன்னும் மாறவில்லை என்றும், இவர்களால் அடுத்த தலைமுறைக்கு ஆப்கானிஸ்தான் நாட்டில் எதுவுமே இருக்காது என்றும் கூறியுள்ளார்.