Categories
உலக செய்திகள்

“மீண்டும் ஆபத்தை எதிர்கொள்ளும் சர்வதேச விண்வெளி நிலையம்!’… ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம் தகவல்..!!

ரஷ்ய நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது, விண்வெளிக் கழிவுகள் மோதக்கூடிய ஆபத்து இருப்பதால் சர்வதேச விண்வெளி நிலையம் மீண்டும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என்று தெரிவித்திருக்கிறது.

அமெரிக்கா, ஜப்பான், கனடா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் சேர்ந்து பூமியிலிருந்து சுமார் 408 கிலோமீட்டர் தொலைவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்திருந்தது. ரஷ்யா மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர்கள், மாறி மாறி, அந்த விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சி பணிகளை செய்து வந்தனர்.

இதற்கிடையில், விண்வெளியில் வருடந்தோறும் இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு அதிக செயற்கைக்கோள்கள் செலுத்தப்படுகின்றன. இதனால் அங்கு விண்வெளி கழிவுகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு  அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்த விண்வெளி கழிவுகள், சர்வதேச விண்வெளி நிலையத்தின் மேல் மோதக்கூடிய நிலை உண்டானது. எனவே அந்த சமயத்தில், விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த விண்வெளி வீரர்கள், விண்வெளி கழிவுகள் மோதாமல் தடுப்பதற்காக குறிப்பிட்ட தொலைவிற்கு விண்வெளி நிலையத்தை நகர்த்தி வைத்தனர்.

இந்நிலையில் ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், மீண்டும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது, விண்வெளி கழிவுகள் மோதக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் விண்வெளிவீரர்கள் விண்கலத்திற்குள் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

Categories

Tech |