Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு அரசு வேலை கொடுங்க…. இல்லேன்னா ஜெயலலிதா சமாதியில் குண்டு வீசப்படும்… மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு…!!

அரசு பணி வழங்கவில்லை என்றால் ஜெயலலிதா சமாதியை குண்டு வீசி தகர்த்து விடுவேன் என வாலிபர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை பாரதிராஜா குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மணிகண்ட பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேரில் சென்று டி.ஜி.பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவானது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. அந்த புகார் மனுவில் உடனடியாக எனக்கு தமிழக அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு பணி வழங்க வில்லை என்றால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியை பெட்ரோல் குண்டு வீசி தகர்த்து விடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வாறு ஏதேனும் நடைபெற்றால் என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை பார்த்து அதிர்ச்சி அடைந்த டி.ஜி.பி அலுவலக ஊழியர்கள் உடனடியாக மணிகண்ட பிரசாத்தை அருகில் உள்ள மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். இதனை அடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் மணிகண்ட பிரசாத்தை திருவல்லிக்கேணியில் உள்ள மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டனர்.

Categories

Tech |