Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இங்கிருந்து போக மாட்டோம்” குழு தலைவிக்கு மிரட்டல்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

தனியார் நிறுவன ஊழியர்கள் மகளிர் சுய உதவி குழு தலைவியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருக்கும் சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடன் பெற்று சித்ரா தனது 21 பெண் உறுப்பினர்களுக்கும் பிரித்து அளித்துள்ளார். அதன்பின் தவணைத் தொகை வசூலித்து சித்ரா அந்த நிதி நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் தவணை தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் சித்ராவின் வீட்டிற்குள் புகுந்து பணத்தை செலுத்தும்படி வற்புறுத்தியுள்ளனர்.

அதற்கு சித்ரா ஊரடங்கு காலம் முடிந்த பிறகு கட்டாயம் பணத்தை செலுத்துவதாக கூறி உள்ளார். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத 6 தனியார் நிறுவன ஊழியர்கள் பணத்தை கொடுத்தால் தான் இங்கிருந்து செல்வோம் என்று கூறி அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சித்ரா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனியார் நிதி நிறுவன ஊழியர்களான பெரிய சாமி கருப்பசாமி உள்ளிட்ட 6 பேரை மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |