இரண்டு வாலிபர்கள் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மா என்ற மனைவி உள்ளார். இவர்கள் தங்களது வீட்டின் பக்கத்தில் இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மாட்டுத்தொழுவம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சுந்தர் மற்றும் பாண்டி என்ற இரண்டு வாலிபர்கள் கண்ணம்மாவுடன் தகராறு செய்ததோடு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இதனையடுத்து அந்த வாலிபர்கள் மாட்டுத் தொழுவம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சோம சுந்தரம் என்பவரை செங்கலால் தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் மாட்டு தொழுவம் கட்டிட சுவரை உடைத்ததோடு கண்ணம்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து செய்துங்கநல்லூர் மகளிர் காவல் நிலையத்தில் கண்ணம்மா புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுந்தர் மற்றும் பாண்டியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.