பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு ஒரு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்து வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரிட்டன் மகாராணிக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் வீடியோவில், “ஒரு நபர் அம்பு வீசும் ஒரு கருவியை கையில் வைத்திருக்கிறார். அந்த நபர் கடந்த 1919 ஆம் வருடத்தில், இந்தியாவின் அமிர்தரஸ் என்னுமிடத்தில் இந்திய மக்களை பிரிட்டன் படை கொடூரமாக கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக அந்நாட்டு மகாராணியை கொலை செய்யப்போகிறேன்” என்று தெரிவிக்கிறார்.
https://twitter.com/LiliMems/status/1475243317667536909
இதனிடையே கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று காலை நேரத்தில், வின்ஸ்டர் மாளிகைக்கு, அருகே ஒரு மர்ம நபர் அலைந்து கொண்டிருப்பதை, கண்காணிப்பு கேமரா மூலம் பாதுகாவலர்கள் கவனித்தனர். அதன்பின்பு, உடனடியாக அவரை கைது செய்திருக்கிறார்கள். மேலும் அந்த இடத்திலேயே அம்பு வீசக்கூடிய ஒரு கருவி கிடந்துள்ளது.
அந்த நபரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள். அந்த மர்ம நபர் வின்ஸ்டன் மாளிகையில் காவல்துறையினரால் கைது செய்யப்படுவதற்கு, சுமார் 24 நிமிடங்களுக்கு முன்புதான் அந்த வீடியோவை பதிவேற்றியிருக்கிறார். கைது செய்யப்பட்ட அந்த மர்ம நபர் தான் வீடியோவில் பேசி இருக்கிறார் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், அது காவல்துறையினரால் உறுதி செய்யப்படவில்லை. வீடியோவில் அந்த நபர், “நான் இந்தியாவை சேர்ந்த சீக்கியர், என்றும் என் பெயர் Jaswant Singh Chail. நான் என் பெயரை Darth Jones என்று மாற்றிவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.