Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நண்பனே என்னை ஏமாத்திட்டான்… குடும்பத்துடன் டிரைவர் தீக்குளிக்க முயற்சி… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

 ஏமாற்றிய நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ டிரைவர் தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காந்தல் பகுதியில் நூர்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்பனிஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற நூர்தீன் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்கள் கையிலிருந்த மண்ணெண்ணெய் கேன் மற்றும் தீப்பெட்டியை பிடுங்கிவிட்டு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி உள்ளனர். இதனை அடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது, நூர்தீன் தான் ஆட்டோ டிரைவராக உள்ளதாகவும், ரோகிணி சந்திப்பு பகுதியில் கடை ஒன்றை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது நண்பர் ஒருவரின் உதவியோடு ஆட்டோவுக்கு பெர்மிட் எடுத்து அதற்கான தவணை தொகையை செலுத்தி வந்ததாக கூறியுள்ளார். அதன்பிறகு நூர்தீன் ஊட்டி போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று அதற்கான பதிவுப் புத்தகத்தை கேட்ட போது ஆட்டோ நூர்தீன் பெயரில் இல்லை என்பதும், அவரது நண்பர் பெயரில் இருப்பதும் தெரியவந்துள்ளது. அதோடு ஆட்டோவின் பதிவுப் புத்தகம், காப்பீடு போன்றவற்றையும் அவரது நண்பர் பெயரிலேயே எடுத்து நூர்தீனை ஏமாற்றியதோடு அவரை மிரட்டி உள்ளார். இந்நிலையில் போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வருவதால் ஏமாற்றிய தனது நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் புகார் மனுவினை நூர்தீன் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஊட்டி நகர மேற்கு பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |