தீவிரவாதிகளுக்கு போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு சப்ளை செய்த மூன்று பேரை கியூ பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த முகமது அனிப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய மூன்று பேரைக் கியூ பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களுடன் தொடர்புடைய மூன்று முக்கிய குற்றவாளிகளை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
பிடிபட்ட மூன்று பேரிடமும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம் திட்டப்பட்டதாகவும் அதற்காக போலி ஆவணங்கள் மூலம் சுமார் 15 சிம் கார்டுகளை வாங்கி பல்வேறு மாநிலங்களில் உள்ள பயங்கரவாதிகளுக்கு கொடுத்து வந்தது அம்பலமாகியுள்ளது.
மேலும் இவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.