உள்ளாட்சி தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த 3 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தற்போது முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இதற்கான வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதன்பின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்வாய், அரிகலபாடி மற்றும் வேட்டாங்குளம் போன்ற ஊராட்சிகளின் தலைவர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதனால் வேட்டாங்குளம் ஊராட்சி தலைவராக சாந்தியையும், அரிகலபாடி ஊராட்சி மன்ற தலைவராக வள்ளியையும் மற்றும் நெல்வாய் ஊராட்சி மன்ற தலைவராக ரேணுகா என்பவரையும் போட்டியின்றி தேர்வு செய்துள்ளனர்.
இதனையடுத்து ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்ற இவர்களை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சு. ரவி எம்.எல்.ஏ சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நெமிலி பேருந்து நிலையத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். அப்போது அ.தி.மு.க-வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியுள்ளனர்.