தண்ணீரில் மூழ்கி அக்கா தம்பி உட்பட மூன்று சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பொண்ணங்குப்பம் கிராமத்தில் சபரிநாதன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கனிஷ்கா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருந்துள்ளனர். அதே ஊரில் பெரியசாமி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அக்ஷயா என்ற மகளும், தர்ஷன் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த சிறுவர்கள் நான்கு பேரும் இணைந்து பொன்னம் குப்பத்தில் இருக்கும் மீன்பிடி குட்டையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது நான்கு சிறுவர்களும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் “எங்களை காப்பாற்றுங்கள்” என்று சத்தம் போட்டுள்ளனர்.
இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுவர்களின் சத்தம் கேட்டு ஓடி சென்று அவர்களை மீட்க முயற்சி செய்துள்ளனர். இதில் தர்ஷன் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஆனால் மற்ற சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த விக்ரவாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியானவர்களின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.