Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ரயில் மோதி மூவர் பலி ! தண்டவாளத்தைக் கடக்கும் போது பரிதாபம் !!

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் தண்டவாளத்தைக் கடக்கும் போது   3 பேர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

வேலூர் மாவட்டம் கரும்பூரைச் சேர்ந்தவர்,  காலணி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் சங்கர்.இவர், தனது சகோதரி பானுமதி மற்றும் 11 வயதான  பேரன் நித்திஷ் ஆகியோருடன் சென்னை செல்வதற்காக இன்று அதிகாலை ஆம்பூர் ரயில் நிலையம் வந்த நிலையில் முதல்  நடைமேடையில் இருந்து , இரண்டாவது நடைமேடைக்குச் செல்ல தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக , அதிவேகத்தில் வந்த ரயில் ஒன்று மூவர் மீதும் மோதியதில்  மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

death body image boy க்கான பட முடிவு

உடல்கள் சிதறிக் கிடப்பதைக் கண்ட மக்கள், ரயில் நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் ,அங்கு சென்ற ரயில்வே போலீசார்  மூவரின்  சடலங்களையும் கைப்பற்றினர்.

 

Categories

Tech |